posted 28th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- வாரிசாக தமிழும், சிபீயும் ஜனாம்மாவால் சபையில் அறிவிக்கப்பட்டார்கள். உண்மையான கோபம் தமிழில் இருக்கும் என்றால், சிபீ, தமிழையும் வாரிசாக அறிவிக்கையில் ஆட்சேபம் தெரிவித்திருக்கலாமே!
- ஏ.வீ.யினால் மிகவும் துக்கித்துப் போயிருந்த சிபூக்கு புத்துயிரைக் கொடுத்தாள் தமிழ். சபையில் முதலில் காட்டிய ஏ.வீ.யினை உண்மை என்று ஏற்றுக் கொண்டவளாய், அடுத்த ஏ.வீ.யினில் உள்ள உண்மையினையும் எடுத்துக் கூறி சிபீயினை தலை நிமிர வைத்தாள் தமிழ்.
- கடும் கோபத்தில் சிபீ சம்யூத்தா மேலே. ஆனால், என்ன செய்தான், உள்ளே போ என்றுதான் கூறினானே தவிர, அவளைத் துரத்தவில்லை.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu | வாரிசு | 22.12.2025
சிபீயின் இலண்டன் வாழ்க்கையானதை வைத்து முதலில் காட்டப்பட்ட ஏ.வீ.யினால், சிபீயின் பெயரானது நார் நாராகக் கிழிக்கப்பட்டது. தமிழ் ஏறினாள் மேடையிலே. இரண்டாவது ஏ.வீ.யினையும் காட்டினாள். இரண்டும் உண்மையான ஏ.வீ.தான் என்று சிபீயின் மனைவியாக பெருமை சேர்த்தாள்.
மேடைக்கு வரவளைக்கப்பட்ட ஜனாம்மா கௌரவிக்கப்பட்டா. ஆனால், ஜனாம்மா உடனே, தமிழையும், சிபீயையும் இவர்கள் இருவரும்தான் தனது வாரிசுக்கள் என்ற சபையிலேயே அறிவித்தா. கூடமோ கைதட்டலினால் களைகட்டியது. வெண்பா ஒன்று நினைக்க ஜனாம்மா ஒன்றை நினைத்துள்ளா. அதுவும் நடந்து விட்டது.
எப்படித்தான் இருந்தாலும், மனிதன் ஒரு நாளாவது தவறு செய்யாமல் இருக்க மாட்டான். அதுதான், சிபீயின் வாழ்க்கையிலும் இடம்பெற்றது. ஆனால், சிபீ இங்கு, Jana Foods ஒரு சர்வராகத்தான் வேலையில் சேர்ந்தார். பின்பு அவரின் முன்னேற்றமானது றொக்கேட் போல மிகவும் குறிகிய காலத்திலேயே உயரத்திற்குப் போனது. கொம்பனியின் பெயரும் வளர்ந்தது. பலராலும் வெளியே கொணரப்பட்ட வார்த்தைகள் வழி மாறி வந்தவர்கள் போல இடம் தெரியாமல் மறைந்தன.
வெண்பாவின் திருகுதாளமானது தோல்வியினைக் கண்டது. கணேஷனின் பிள்ளையாச்சே, தோல்விக்கென்றே பிறந்தவர்களாச்சே!
ஜனாம்மாவே தமிழையும், சிபீயையும் ஆராத்தி எடுத்தாலும், இன்னமும் அடம்பிடித்தவனாய் சிபீ முறுகிக் கொண்டு நின்றான். தமிழின் புருஷன் என்ன இன்னமும் முறுகுகின்றான் என்று பேத்திகள் இருவரும் பகிடி விட்டனர்.
கோபத்தில் ஹோலினிலே உலாத்திக் கொண்டு நின்ற சிபீயை எப்படி தனது மானே தேனே சுப்பறாக இருந்ததா என்றும், அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனீயா சிபீ என்று கேட்ட சம்யூத்தாவைப் பார்த்து கடுப்பில் நின்ற சிபீ. அவளைப் போகும் படி உறுத்துச் சொன்னான்.
ஆனால், தமிழ் என்னென்று இந்த விஷயத்தினை அறிந்து ஏற்கனவே ஒன்றினை தயாரித்தாள் என்பது சிபீக்கு மிகவும் புரியாத புதிராக இருந்தது. அவனால் மனதினுள் வைத்துக் கொள்ள மாட்டான். உடனடியாக நேராகவே தமிழிடம் கேட்டான் சிபீ. இதுதான் சிபீயின் குணமே, நேராகவே கேட்பதுதான். அதற்குக் காரணம். நான் நேற்றுச் சொன்னதுதான்.
தமிழ் கீழே ஜனாம்மாவுடன்தானே கதைத்துக் கொண்டு நின்றாள். ஆனால், சம்யூத்தா, சிபீயுடன் கதைத்ததினையும் அவதானித்தாள், ஆராய்ந்தாள். இதனில் ஏதாவது குளறுபடிகள் இருக்கலாம் என்று ஊகித்தாள். தமிழ் ஊகித்த படிதான் அங்கு நடைபெற்றது. ஆனால், அது சம்யூத்தாவால் அல்ல. அது வெண்பாவால் என்பதும் தெளிவாகி விட்டது.
உலகம் அழகுதான். ஆனால், அங்குதான் எல்லாவிதமான அழுக்குகளும் இருக்கின்றனவே! எனவே, நமக்குள்ள எல்லாப் புலன்களையும் எப்பவும் கூர்மையாக வைத்திருக்க வேண்டும். இது வாழ்க்கையில் உள்ள அசம்பாவிதங்களிலிருந்த தப்பித்து வாழ வேண்டுமென்றால் இது அவசியம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!